தாளவாடி அருகே மக்காச்சோள பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடி... விவசாயி கைது


ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கேர்மாளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒருத்தி  மலைக்கிராமத்தில் குருசாமி என்பவர் தன்னுடைய 7 ஏக்கர் தோட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

 


 

குருசாமியின் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மக்காச்சோள காட்டுக்குள் ஆய்வு செய்தனர்.

 


 

அப்போது மக்காச்சோளம் பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடி வளர்ப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து  குருசாமியை கைது செய்த காவல்துறையினர் 3.50 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.