சேலம் மாவட்டத்தில் சோனா கல்விக் குழுமம் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையகத்தை தொடங்கியுள்ளது




 

சேலம் மாவட்டத்தில் சோனா கல்விக் குழுமம் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையகத்தை தொடங்கியுள்ளது. தொழில்நுட்பம், தொழில்நுட்பக்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக உள்ள சோனா கல்வி குழுமம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விதமாக தன் வளாகத்தில் ஆயுஷ் மருத்துவ சிகிச்சையகத்தை தொடங்கியுள்ளது.

 

பாரம்பரிய மருந்துகளின் முதல் மற்றும் முக்கிய பங்கு நோய்களை தடுப்பதாகும் அதற்கேற்றார்போல் கடந்த வாரம் தேசத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி covid-19க்கு எதிராக போராட ஆயுஷ் அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பாரம்பரிய வழிகளை மீண்டும் ஒப்புதல் அளித்தார். உலகெங்கிலும் உள்ள இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள் மற்றும் நடைமுறைகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம் என்றும் கூறினார். சோனா கல்லூரி பாரம்பரிய நடைமுறைகளையும் மருந்துகளையும் இளம் இந்தியாவின் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்குவதில் முனைப்பாக உள்ளது.

 

சோனா குழுமம் அதன் தொழில் நுட்ப வளாகத்தில் ஒரு ஆயுஷ் பல்நோக்கு பாரம்பரிய மருத்துவ சிகிச்சையகத்தை அமைத்து ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றின் ஆலோசனை மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்குகிறது.

 

இவை அனைத்தும் ஒரே இடத்தில் இயங்கி வருவது நாட்டிலேயே முதன்மையானது என்று சோனா குழுமத்தின் துணைத் தலைவர் திரு தியாகு வள்ளியப்பா கூறினார். சோனா மருத்துவ கல்லூரியின் மேற்பார்வையில் ஆயுஷ் சிகிச்சையகம் (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா) செயல்படும்.

 

சோனா ஆயுஷ் சிகிச்சையகம் இயற்கை உணவுக்கு முதன்மை மற்றும் விரிவான முக்கியத்துவம் கொடுக்கிறது. மசாஜ், மண் சிகிச்சை, நீர் சிகிச்சை நறுமண சிகிச்சை, குத்தூசி மருத்துவம், அக்குபிரஷர், கிஃ ப்ளெக்காலஜி, பிசியோதெரபி ஆயுர்வேத மருந்துகள் சித்தா யுனானி போன்ற இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளை பயன்படுத்தி நோய் களுக்கான சிகிச்சை வழங்கப்படும் என சோனா இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர் எஸ்.மதன்குமார் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.

 

இந்த சந்திப்பின்போது சோனா கல்வி குழுமத்தின் தலைவர் திரு வள்ளியப்பா ஆயுஸ் மருத்துவர்கள் கண் மருத்துவர்கள் சசிகுமார் மற்றும் சோனா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 




Previous Post Next Post