தாளவாடி அருகே பிக்கப் வேன் மீது இரு சக்கர வாகனம் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி


 

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து செண்டு மல்லிப்பூ ஏற்றிக்கொண்டு பிக்கப் வேன் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

 

அப்போது திருவண்ணாமலையில் இருந்து  மைசூர் நோக்கி ரமேஷ் என்கிற இளைஞர் ஆசனூர் அருகே தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த பிக்கப் வேன் மீது இருசக்கர வாகனம் மோதி ரமேஷ் தூக்கி எறியப்பட்டார்.

 

ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆசனூர் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.