திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை


திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில்  மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மாநகர்  மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் முன்னாள் மாவட்டத் தலைவர் வக்கீல் எம் சரவணன் துணைத் தலைவர் முரளி கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம் சிவா அண்ணாசிலை விக்டர் கண்ணன் நிர்மல் சிவாஜி பெரியதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்