பேருந்து நிலையம் இடம் மாற்ற எதிர்ப்பு மற்றும் அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என்று நகர  திமுக கோரிக்கை


 

வேலூர் மாவட்டம்,  பேர்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட தற்போது இயங்கி வருகின்ற பேருந்து நிலையம் , பேர்ணாம்பட்டு மக்களுக்கு மிகவும் வசதியாகவும் , நகரின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளது.

 

இந்த பேருந்து நிலையம் உள்ளூர்,வெளியூர், நகரம் மற்றும் கிராம மக்களின் வசதிக் குட்பட்டே அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் அருகில் காவல் நிலையம் , அரசு தனியார் மருத்துவமனைகள் , அரசு , தனியார் பள்ளிகள் , வங்கிகள், வணிக வளாகங்கள் , ஹோட்டல்கள் , காய்கனி , மளிகை, பேன்சி  கடைகள் அனைத்தும் இந்த பேருந்து நிலையத்தை சுற்றி அமைந்துள்ளது. பழைய பேருந்து நிலையமே தொடரவேண்டும் என்றும் புதிய பேருந்து நிலையம் அமையகூடாது என்றும் நகர  திமுக சார்பாக நகராட்சி ஆணையரிடம் திமுக நகர செயலாளர் ஆலியார் ஜூபேர் அஹமது அவர்கள் தலைமையில்  கோரிக்கை மனு அளித்தனர்.

 

மற்றும் பேர்ணாம்பட்டு  நகராட்சி பகுதிக்கு பல அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.