கோத்தகிரி ஊராட்சியில் தி.மு.க சார்பில் முப்பெரும் விழா


 

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா,  தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, திமுகவின் 71 ஆண்டு துவக்க விழா ஆகியவற்றை ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாட  திமுக தலைவர் தளபதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

 

அதன்படியும்   மாவட்ட செயலாளா் பா.மு.முபாரக் அறிவுரை படியும், கோத்தகிரி ஒன்றிய செயலாளர்  நெல்லை கண்ணன் அறிவுறுத்தல்படியும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் பெரியார் அவர்களின் 142 வது பிறந்த நாள் விழா,அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் விழா மற்றும் திமுகவின் 71-ஆம் ஆண்டு துவக்கவிழா ஆகியவற்றை ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

 

பெரியாரின் திருவுருவப் படத்திற்கு கழகத்தினர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் தலைமையிலும் தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் கணபதி முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.