கீழ்பவானி வாய்க்காலில் விபத்து குறித்து விழிப்புணர்வு ஒத்திகையை


 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைக்க வருபவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து சுற்றுலா வருவர்கள் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் தெரியாமலும், அதிக தண்ணீர் வருவதால்  நீச்சல் தெரிந்திருந்தும் சுழல் மற்றும் சேற்றில் சிக்கி உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றனர்.

 

இந்த உயிரிழப்புகளை தடுக்க கோபிசெட்டிபாளையத்தில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் வருவாய் துறையினருடன் இணைந்து தண்ணீரில் முழ்கியவர்கள் மற்றும்   பேரிடர் காலங்களில் சிக்கித்தவிக்கும்  பொதுமக்களை மீட்பது குறித்து விழிப்புணர்வு ஒத்திகையை  பொதுமக்கள் முன்னிலையில் கீழ்பவானி வாய்க்காலில்  நடைபெற்றது.

 


 

இதில் ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் உயிருக்கு போராடி வருபவர்களை காற்று நிரப்பபட்ட பலூன்கள் மற்றும் நாம் அன்றாட உபயோப்படுத்தும் பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்தி எவ்வாறு ஆபத்தில் உள்ளவர்களை மீட்டெடுக்காலாம்,மேலும் கயிற்றை இக்கரையிலிருந்து அக்கரைக்கு கட்டி அதன் மூலம் நீரில் மூழ்கி தவிப்பவர்களை எவ்வாறு மீட்டெடுக்கலாம் என பொதுமக்கள் முன்னிலையில் பேரிடர் மீட்பு குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் சிறப்பாக செய்த காண்பித்தனர், அதனை தொடர்ந்து தண்ணீரீல் மூழ்கி மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி எவ்வாறு செய்வது குறித்தும் விளக்கமாக பொதுமக்களுக்கு புரியும் வகையில் செய்து காண்பித்தனர்.

 

இந்ந ஒத்திகையின் போது பேரிடர் மீட்பு குழுவுடன் இனைந்து இரண்டு சிறுவர்கள் தானக முன்வந்து இந்த ஒத்திகையில் கலந்து கொண்டு தத்ரூபமாக நடித்து காட்டியது,இதனை பார்க்க வந்தவர்களை நெகிச்சியில் ஆழ்தியது, மேலும் நீச்சல் தெரியாதவர்கள் அதிக தண்ணீர் செல்லும் இடங்களில் குளிக்க வேண்டாம் என்றும்,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கட்டாயம் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர், முன்னதாக இந்ந செயல்விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுங்களை பொதுமக்களுக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வழங்கினர்.

Previous Post Next Post