தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனும் திமுகவில் இணைந்தார்


 

பள்ளி  கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் மகனும் தமிழ்நாடு மருந்து பொருள் விற்பனை சங்க செயலாளருமான கே.கே.செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 

இந்நிலையில் இன்று செல்வம் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார். அவருக்கு  ஈரோடு வடக்கு மாவட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து அமைச்சரின் அண்ணன் கே.ஏ.காளியப்பன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் உறுப்பினர் படிவத்தை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சிறுவலூர் முருகன், நம்பியூர் மெடிக்கல் செந்தில்குமார், சிறுவலூர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

திமுகவில் இணைந்த அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது