நெல்லையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா

 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையில் நெல்லை கோர்ட் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கார்த்திக், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, விஜயன், விஜய், உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், முத்துராமன், கோபால், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.