பாளையங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்த தான முகாம் 

பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட பாஜக தலைமை அலுவலத்தில் வைத்து  இரத்ததான முகாம் இளைஞரணி சார்பில் நடைபெற்றது. 


நெல்லை மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட இளைஞரணி தலைவர் கணபதி தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் அனிஷ் மார்த்தாண்டம் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை தலைவர் அருண் வரவேற்புரை ஆற்றினார்.

 சிறப்பு விருந்தினராக பாஜக நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

 

இந்த முகாமில் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர் ராஜபாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துக்குமார், மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து, செயலாளர் நடராஜன், இளைஞரணி வள்ளியூர் ஒன்றிய துணை தலைவர் உதயகுமார், மானூர் ஒன்றிய துணைத் தலைவர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாளை அரசு மருத்துவக்கல்லூரி ரத்த-வங்கி பிரிவு  உதவி பேராசிரியர் டாக்டர் ரவிசங்கர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். 

 

இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.