விமான நிலையத்தில் கால் டாக்சி டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு


விமான நிலையத்தில் கால் டாக்சி டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போக்குவரத்து போலீசார் அறிவுரை.

 


 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பின் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் விமான நிலையத்தில் உள்ள கால் டாக்சி டிரைவர்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த நோட்டீசை போக்குவரத்து போலீசார் வழங்கினார்கள்.

 

பரங்கிமலை போக்குவரத்து போலீசார்  கால் டாக்சி டிரைவர்களிடம் கொரோனா காலத்தில் விபத்துகள் அதிகமாக குறைந்து இருந்தது. தற்போது போக்குவரத்து அதிகரித்து வருவதால் மீண்டும் விபத்துகள் ஏற்படாத வகையில் சாலை விதிகளை கைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீசை வழங்கினார்கள்.