சேலம் பெரமனூர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத பூஜை


சேலம் மாவட்டம் பெரமனூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


சுவாமிகளுக்கு புது பட்டாடை நறுமண மலர் மாலைகள் கற்கள் பதித்த நகை ஆபரணங்கள் சுட்டி சிறப்பாக அலங்காரம் செய்தார் திருக்கோவில் அர்ச்சகர் ஸ்ரீதர். பின்பு அர்ச்சகர் ரவி துளசி தளங்களால் அர்ச்சனை செய்யப்பட்டு ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு மகா  கற்பூர தீபாராதனை காட்டினார். கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.