தேர்தலின்போது விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்திற்க்கு ரூபாய் 15 லட்சம் உதவித் தொகை - கனிமொழி MP வழங்கினார்.!


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த கொம்மடிகொட்டை கிராமப் பள்ளியில் ஆசிரியர் சமுத்திர பாண்டி என்பவருக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட 15 லட்சத்துக்கான காசோலையை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  கலந்துகொண்டு தேர்தல் ஆணையத்தின் மூலம் அன்னாரது வாரிசு தருவதற்கான மனைவி கங்காதேவி மகன்கள் கதிர்காம வேல்,கதிர்காமதுரை ஆகியோருக்கு தலா 5 லட்சம் வீதம் ரூபாய் 15 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பாக இருந்த சமுத்திரபாண்டி மனைவிக்கு 2.60 லட்சத்துக்கான காசோலையை கனிமொழி கருணாநிதி வழங்கினார் 

நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர் பயிற்சி  ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் கோகிலா, தேர்தல் வட்டாட்சியர் ரகு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத் தலைவர் அந்தோனி ஆரோக்கியராஜ், மற்றும் முக்கிய பிரமுகர்கள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.