தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கொரோனா நிவாரண உதவி - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வழங்கினார்.


தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் - ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கொரோனா கால நிவாரண பொருட்களான 4 தூக்கு படுக்கைகள், 4 சக்கர நாற்காலிகள் மற்றும் 300 படுக்கை விரிப்புகள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு விடம் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பொருளாளர் பொன்முருகன், தூத்துக்குடி மாவட்ட இணை செயலாளர் தவமணி மற்றும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர். 

இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி சைலஸ் ஜெபமணி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ஆனந்தராஜன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

Previous Post Next Post