தாளமுத்து நகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது 13 கிலோ கஞ்சா பறிமுதல்.!


தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில்

பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிலும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்  கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில்  சரண்யா, தலைமைக் காவலர் ஜீசஸ் ரோசாரி, 

தனிப்பிரிவு காவலர்  முத்துராஜன், முதல் நிலை காவலர்கள்  திருமணி, சுந்தர்சிங், காவலர்கள்  சிலம்பரசன், மாதவன் மற்றும்  ஆனந்தகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் மேற்படி தனிப்படையினர் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள முட்புதரில் இருந்த 3 பேர் போலீசாரை கண்டதும்  தப்பி ஓடியுள்ளனர். 

உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி வடக்கு சங்கரபேரி சேர்ந்த பால்சாமி மகன் ஜெயராமன் (32), தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் காளியப்பன் (34) மற்றும் 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் மகன் கனகசபாபதி (25) என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் எதிரிகளான ஜெயராமன், காளியப்பன் மற்றும் கனகசபாபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மேற்படி எதிரிகள் மூன்று பேரை கைது செய்து, 13 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Previous Post Next Post