தூத்துக்குடி பெருமாள் கோவிலில் 90 லட்சம் மதிப்பில் நடைபெறும் திருப்பணிகள் - எம்.பி, அமைச்சர்கள் ஆய்வு.!


தூத்துக்குடி மாநகராட்சி சிவன் கோவில் அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில்  சென்று ஆய்வு செய்தனர். 

ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சந்திரமோகன், இயக்குநர், சுற்றுலா மேம்பாடு சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன்,   ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.


ஆய்வின்போது, பெருமாள் கோயிலில் ரூ.90 இலட்சம் மதிப்பில் சுவாமி கர்ப்பகிரகம்,பூமாதேவி மற்றும் ஸ்ரீதேவி சிலை உள்ள பகுதிகள் சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளுக்கான பணிகளை ஆய்வு செய்து உடனடியாக பணிகளை தொடங்க உத்தரவிட்டனர். 

மேலும், அங்கு கல் மண்டபம் அமைப்பது  குறித்தும், கும்பாபிஷேகம் நடத்துவது குறித்தும் கலந்தாய்வு மேற்கொண்டனர்.  ஆலைய கமிட்டியை சீரமைத்து மேற்கணட் திருப்பணிகளை மேற்கொள்ளவது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உத்தரவிட்டனர். 



ஆய்வின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருத்தஞ் ஜெய் நாராயணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்  அன்புமணி,  திருக்கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post