பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் தீபிகா அப்புக்குட்டி கையெழுத்து இயக்கம்

 பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் தீபிகா அப்புக்குட்டி தலைமையில் கையெழுத்து இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சினையாக உள்ளது. தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினை கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.


இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் தீபிகா அப்புக்குட்டி தலைமையில், திருப்பூரில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப வரும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கமானது நடந்து வருகிறது. இதில் மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் தீபிகா அப்புக்குட்டி, மாவட்ட தலைவர் சகாயமேரி ஆகியோர் பொதுமக்களிடம் பெட்ரோல் டீசல் விலை உயர்வினை கண்டிக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி அவர்களிடம், கையெழுத்து பெற்றனர். திருப்பூரில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்குகளில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 
Previous Post Next Post