நாலாட்டின்புதூரில் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.!


தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரணி ஜீவா நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் கருப்பசாமி (24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் இசக்கிமுத்து (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று  கருப்பசாமி வானரமுட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த இசக்கிமுத்து கருப்பசாமியை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தார்