தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி - ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.!


தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது. 

இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார். 

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோ ராஜா, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, வட்டாட்சியர் ஜஸ்டின், பிஎம்சி பள்ளி முதல்வர் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.