தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய காவல் 23 காவல்துறையினருக்கு எஸ்.பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு.!


தூத்துக்குடி மாவட்டத்தில் புளியம்பட்டி, நாரைக்கிணறு மற்றும் கழுகுமலை ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபல கொள்ளையனை கண்டுபிடித்து கைது செய்து 

அவரிடமிருந்து திருடுபோன தங்க நகைகள் 22 சவரன் தங்க நகையை மீட்ட புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், உதவி ஆய்வாளர் செல்வன், மணியாச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, நாரைக்கிணறு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் கொடிவேல், புளியம்பட்டி காவல் நிலைய முதல் நிலை காவலர் கணேசன், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பிரபாகரன், கடம்பூர் காவல் நிலைய காவலர் விடுதலை பாரதிகண்ணன், புளியம்பட்டி காவல் நிலைய காவலர்கள் சுகுமார், மகேஷ் மற்றும் செண்பகராஜா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 12.08.2021 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் போன்றவற்றை கைப்பற்றிய 

விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் கலா, உதவி ஆய்வாளர் காசிலிங்கம், தலைமை காவலர் நாகஜோதி, முதல் நிலை காவலர்கள் கார்த்திக்ராஜா, மகேந்திரன், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் பால்ராஜ், காடல்குடி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் முத்துகாமாட்சி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையயத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 108 வழக்குகளை கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II  நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுத்தும் அதில் 34 வழக்குகளில் தண்டனை பெற்று கொடுத்த 

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், தலைமை காவலர்  வைரமுத்து மற்றும் கயத்தார் காவல் நிலைய முதல் நிலைய காவலர் மாரிக்கண்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்த 12 சிறுவனிடம் முகவரி விலாசம் விசாரித்த போது சொல்லத் தெரியாமல் இருந்தவனை துரிதமாக செயல்பட்டு அவனது முகவரியை கண்டுபிடித்து அவனது தாயாரிடம் ஒப்படைத்த 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  செல்வராஜ் மற்றும் தலைமை காவலர் சரவணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட திரவியபுரம் உருண்டையம்மன் கோவில் அருகில் இருசக்கர வாகன ரோந்து அலுவலில் இருக்கும்போது, இருவர், கையில் அரிவாளால் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டு இருந்ததை 

தடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து பெரிய அளவில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு செயல்பட்ட தூத்துக்குடி வடபாகம் காவலர்  சுடலைமுத்து என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

2 காவல் ஆய்வாளர் உட்பட 23 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

இந்நிகழ்வின் போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர்கள்  கணேஷ்குமார், ஷாமளாதேவி மற்றும்  மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Previous Post Next Post