தூத்துக்குடியில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சைக்கிள் பேரணி - ஆட்சியர் பங்கேற்பு.!

தூத்துக்குடியில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சைக்கிள் பேரணி - ஆட்சியர் பங்கேற்பு.! 


தூத்துக்குடியில் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி மற்றும் கடலோர காவல்படை இணைந்து நடத்திய சிறப்பு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துவக்கி வைத்து பங்கேற்றார். 

பேரணி முத்துநகர் கடற்கரை இருந்து, புதிய துறைமுக கடற்கரை வரை நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலோர காவல்படை துணைத் தலைவர் அரவிந் சர்மா, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.