பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - உயர்நீதிமன்றம்


பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இரு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததை எதிர்த்து சிவசங்கர் பாபா ஜாமீன் கேட்டிருந்தார். 

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டிருந்தார்.