தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வாகனங்கள் சரியாக இயங்குகிறதா என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் கனரக வாகனங்கள் 15, நான்கு சக்கர வாகனங்கள் 68 மற்றும் இருசக்கர வாகனங்கள் 42 மொத்தம் 125 வாகனங்களை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி பரிசு வழங்கினார். 

ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகனங்களை பயன்படுத்தும் ஓட்டுனர்களிடம் வாகனங்கள் மற்றும் அவர்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்தார். குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சீர் செய்யுமாறும், 

காவல்துறையினரின் குறைபாடுகளை சரி செய்யுமாறு மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் அவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், 

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

வாகன ஆய்வின் போது ஆயுதப்பபடை காவல் துணை கண்காணிப்பாளர்  கண்ணபிரான், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள்  கணேஷ்குமார், செல்வி. பவித்ரா, செல்வி. ஷாமளாதேவி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, 

ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு  உதவி ஆய்வாளர்  செல்வக்குமார், அந்தோணி ராபின்ஸ்டன் கென்னடி மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.