சேலம் பூம்புகாரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கணபதி தரிசனம் சிறப்பு கண்காட்சி 10%சிறப்பு தள்ளுபடி

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்  வளர்ச்சிக்கழகம் பூம்புகார் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டு கைத்திறன் உலகில் தனியொரு முத்திரை பதித்து செம்மையாக செயல்பட்டு வரும் ஒரு அரசு நிறுவனம். நமது பாரம்பரியம்,கலாச்சாரம், பண்பாடு,இவைகளை கைவினைக் கலைகள் மூலம் பேணிக்காப்பது கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு பல விருதுகளைக் கொடுத்து ஊக்குவித்து மற்றும் கைவினை கலைகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஓர் அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. 

கைவினைஞர்களும் பொது மக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களிலும் விழாக் காலங்களிலும் பல கண்காட்சிகளை செம்மையாக நடத்தி வருகின்றது. இதன் ஒரு தொடர்ச்சியாக சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 


கணபதி தரிசனம் என்ற சிறப்பு கண்காட்சி வரும் 02.09.2021 முதல் 15.09.2021 வரை நடைபெற உள்ளது. இக் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக விநாயகரின் திருவுருவம் கொண்ட களிமண்,பஞ்சலோகம், பித்தளை,வாகை மர சிற்பங்கள், சந்தன மர சிற்பங்கள் மற்றும் கருப்பு உலோக சிலைகள் தஞ்சாவூர் மற்றும் நூக்க மர உட்பதிப்பு ஓவியங்கள் மார்பில் துகல் பொம்மைகள் போன்ற எண்ணற்ற வகையான விநாயகர் சிலைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 

களிமண் விநாயகர் 1/2 அடி முதல் 2 1/2 அடி வரை, பஞ்சலோக விநாயகர், பித்தளை விநாயகர்,சித்தி விநாயகர்,பஞ்சமுக விநாயகர்,வெண்மர விநாயகர், சந்தன மர விநாயகர், கருப்பு உலோக விநாயகர்,வெள்ளெருக்கு  விநாயகர், சுவரில் பொருந்தக்கூடிய பித்தளை விநாயகர், கருங்கல் விநாயகர்,மாகல் விநாயகர், தஞ்சாவூர் ஓவிய விநாயகர்,ரசமணி விநாயகர்,ஸ்படிக விநாயகர், பச்சைகல் விநாயகர், நவதானிய விநாயகர்,சன்ஸ்டோன் விநாயகர், போன்ற எண்ணற்ற வகையான பூஜை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10% சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இக் கண்காட்சியில் சுமார் ரூபாய் 5 இலட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. இக்கண்காட்சியில் குறைந்தபட்சம் ரூ.150 முதல் ரூ.54,000 விலை வரையில் பல வகை விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் பல்வேறு வகை விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை சேலம் மாநகர மக்கள் வாங்கி  விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடும் மேலும் இந்த பொம்மைகள் மற்றும் சிலைகளை உற்பத்தி செய்யும் கைவினைஞர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என மேலாளர் ஆர்‌.சந்திரபோஸ் தெரிவித்தார்.