தூத்துக்குடியில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினருக்கு எஸ் பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு.!



ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்த 38 இ.த.ச வழக்குகள், 28 மதுவிலக்கு வழக்குகள் மற்றும் 20 புகையிலை மற்றும் குட்கா வழக்குகள் உட்பட 86 வழக்குகளை கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 

ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற ‘லோக் அதலாத்’ நீதிமன்றத்தில் தண்டைனையில் முடித்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்  பழனிச்சாமி, முதல் நிலை காவலர்  அனுசங்கர், காவலர்கள் பாரத்தீபன் மற்றும் நாகராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும், 

குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் பரபரப்பான சுவற்றில் இருந்த எதிரியின் கைவிரல் ரேகையை எடுத்து திறம்பட செயல்பட்டு அதன் மூலம் எதிரியை அடையாளம் கண்டு 

கைது செய்த தூத்துக்குடி ஒருவிரல் ரேகை பதிவு கூட உதவி ஆய்வாளர் பிரேம்குமார் அவர்களின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

விபத்து மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்ட்ட எதிரிகளுக்கு துரிதமாக சம்மன் சார்பு செய்து எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து 72 வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனையுடன் வழக்குகளை முடித்த  

முத்தையாபுரம் காவல் நிலைய தலைமை காவலர்  மந்திரமூர்த்தி மற்றும் முதல் நிலை காவலர்  அய்யப்பன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் நீதிமன்றம் மூலம் நடைபெற்ற லோக் அதலாத்தில் 53 வழக்குகளை முடித்து எதிரிகளுக்கு ரூபாய் 75,000/- அபராத தொகையுடன் தண்டனை பெற்று கொடுத்த 

திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய முதல் நிலை காவலர்  நிஷாந்த் மற்றும் முதல் நிலை பெண் காவலர் பிரேமா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடம்பூர் காவல்  நிலையத்தில் நீதிமன்றம் மூலம் நடைபெற்ற லோக் அதலாத்தில் 20 வழக்குகள் எடுக்கப்பட்டு வழக்குகள் அனைத்தும் தண்டனை கிடைக்க உதவியாக இருந்த கடம்பூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்  இசக்கிமுத்து மற்றும் பெண் காவலர் கனகா ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த  வாரம் மட்டும் 5 எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உதவியாக இருந்த தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை 2ம் படை பிரிவு காவலர் சுந்தரவேல் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

காவல் ஆய்வாளர் உட்பட 13 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.

Previous Post Next Post