தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை7மணி முதல் இரவு7மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் - ஆட்சியர் தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானாநோய் தொற்றுபரவலை தடுத்திடும் பொருட்டு அரசின் உத்தரவின்படி 12.09.2021 இன்று காலை7மணி முதல் இரவு7மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மெகா கொரானா தடுப்பூசி முகாமில்” 1,00,000(ஒரு லட்சம்) நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம் அந்தந்த பகுதியில் வாக்குசாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதி உட்பட 805 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 50 நடமாடும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு அவர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாத முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர்.