சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி.!

சேலம் கோட்டை சிஎஸ்ஐ சூசன மஹாலில்  வைத்து சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிப்
பொருட்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை கௌரவித்தல் 

மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் அரசாணை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சங்க கௌரவ தலைவர் மற்றும் மாநில தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர் எஸ் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது ஆர் சுதாகரன் வரவேற்புரை ஆற்றினார். 

எஸ். சங்கரன், எம். முருகானந்தம், வி. இளங்கோவன், ஆர். பாலசுப்பிரமணி, எஸ். நிர்மல் குமார், ஏ. சந்திரன், கே. கோபாலகிருஷ்ணன், என். ஜீவனந்தம், எஸ். மணிகண்டன், பி.முத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

நிவாரண பொருட்களை சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.ராஜேந்திரன் சேலம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் நிவாரண பொருட்களை வழங்கினார். சேலம் மாநகராட்சி ஆணையாளர் தா. கிருஸ்து ராஜ், சேலம் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் ந. யோகானந்தம் மாணவ மாணவிகளை கௌரவித்தார். 

ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் அரசாணை தொகுப்பு நூலை வெளியிட்டார். ராஜஸ்தானி அசோஷியேஷன் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. என் நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன் என். ஜெயவேல் வி. செந்தில்குமார் நன்றியுரை ஆற்றினார்.

Previous Post Next Post