சேலத்தில் இலவச இருதய பரிசோதனை முகாம்.!

அகரம் வெள்ளாஞ் செட்டியார் சங்கம் ஆல்வின் மருத்துவமனை ஜேகே மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம்.                

சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அகரமகாலில் அகரம் வெள்ளாஞ்செட்டி


யார் சங்கம்,ஆல்வின் மருத்துவமனை,     ஜே.கே.மெடிக்கல் சென்டர் இணைந்து  இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இருதயநோய் (இசிஹச்ஓ) பரிசோதனை, இசிஜி பரிசோதனை, ரத்தப் பரிசோதனை,இரத்த சர்க்கரை பரிசோதனை, பிசியோதெரபி,எலும்பு அடர்த்தி பரிசோதனை (பிஎம்டி) ஆகியவற்றிற்கா ரூ. 3500 மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு செய்யப்பட்டது. 

இந்த மருத்துவ முகாமில் ஜே.கே. மெடிக்கல் சென்டர் நிறுவனர்  இன்டர்வென்டினல் கார்டியோலாஜிஸ்ட் டாக்டர் பி. கிருஷ்ணமூர்த்தி, ஆல்வின் மருத்துவமனை நி.கு.உறுப்பினர்,அ.வெ.செ.சங்கம் டாக்டர்.ஜே. அருள்குமார், அகரம் வெள்ளாஞ்செட்டியார் சங்க தலைவர் டி. லோகநாதன், செயலாளர் எம்.தமிழ்ச் செல்வன், பொருளாளர் டி.அன்பழகன் மற்றும் செயற்குழு நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post