பாஸ்போர்ட் விசாரணைக்கு ரூ.500 லஞ்சம் - போலீஸ் ஏட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.!

 


திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், வெளிநாடு செல்ல கடந்த 2006ல் பாஸ்போர்ட் விண்ணப்பித்தார். பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு விண்ணப்பித்தவரின் விவரங்களை சேகரித்து (என்ஓசி) தடை இல்லா சான்று அனுப்ப கோரி உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு பணியில் இருந்த அப்போதைய ஏட்டு ரவி என்பவர் விண்ணப்பதாரரிடம் விசாரணை நடத்தியதோடு, ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து சீனிவாசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் அறிவுரைப்படி பணத்தை கொடுத்தபோது, லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ரவியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி கார்த்திகேயன் வழக்கை விசாரித்து, ஏட்டு ரவிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

Previous Post Next Post