திருச்செந்தூரில் 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது- கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்.!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  மார்க்கெட் ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், 

அதில் இருந்த 1) இசக்கி ராஜா (32), த/பெ. சண்முகம், ராமையன்பட்டி, திருநெல்வேலி,  2) கதிரேசன் (25), த/பெ. பிச்சைபழம், ராஜகோபாலபுரம், நாங்குநேரி, திருநெல்வேலி,  3) பிரபாகரன் (35), த/பெ. பரமசிவன், சங்கர் நகர், திருநெல்வேலி,  மற்றும்; 4) பிரசாந்த் (25), த/பெ. கல்யாணம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம்,

 ஆகிய 4 பேரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 4 பேரையும் கைது செய்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 1300 கிலோ புகையிலைப் பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய  சரக்கு வாகனத்தையும் (TATA ACE TN 03 Z 2728) பறிமுதல் செய்தனர். 

மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் உட்பட 174 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Previous Post Next Post