தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!


தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதிப்பு, சேதங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான  பிரையண்ட் நகர், பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று பாதிப்புகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் மழை பாதிப்புகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின் போது அவருடன் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், கே கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மாநகராட்சி ஆனையர் சாருஸ்ரீ ஆகியோர்  உடனிருந்து மழை வெள்ள பாதிப்பு குறித்து விளக்கினர். 

பின்னர் பாதிக்கப்பட்ட மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் தேங்கியுள்ள நீரை விரைவில் வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, சமூக நலத்துறை அமைச்சர், கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆனையர் சாருஸ்ரீ, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து  முத்தம்மாள் காலனி, ராம் நகர் உள்ளிட்ட 5 இடங்களை பார்வையிடுகிறார். பின்னர் தூத்துக்குடி – எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறார். பிறகு கார் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

Previous Post Next Post