வாட்டர் ஹீட்டரில் வைத்திருந்த தண்ணீரில் கை வைத்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்

சென்னை வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் ஷியாம்(15). அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குளிப்பதற்காக  மின்சார வாட்டர் ஹீட்டர் மூலம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து கொண்டிருந்த போது தண்ணீர் சுடாகிவிட்டதா என பார்பதற்காக விரலை தண்ணீரில் விட்டு பார்த்துள்ளார்.


அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம்  தாக்கி மயங்கிக் கீழே விழுந்தார். இதைப் பார்த்த பெற்றோர் மற்றும்  அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை கொண்டு சென்று அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

சம்பவம் குறித்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவன் சியாம் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post