லஞ்சஒழிப்பு சோதனையில் சிக்கிய மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை.!


தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அண்மையில் வெங்கடாசலம் வீட்டில் தமிழ்நாடு லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். லஞ்சஒழிப்பு சோதனையில் 6.5 கிலோ தங்கம், ரூ.13.5 லட்சம் பணம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் , சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். முன்னதாக சேலம் அம்மம்பாளையம் வீட்டில் 4  ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியிருந்தனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், சோதனையில், 8 கிலோ  தங்கம்,10 கிலோ  மற்றும் ரூ.13.5 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post