முன்னாள் அதிமுக அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!

 
முந்திரி லாரி கடத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்தவர், சி.த.செல்லப்பாண்டியன். தூத்துக்குடி அதிமுகவிலும் முக்கியப் புள்ளி. இவரது 2-வது மகன் ஜெபசிங் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்துதான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் செல்லப்பாண்டியன்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் என இரட்டைத் தலைமை வந்தபோது, இவரிடம் இருந்த ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியில் இருந்த இவரை சமாதானப்படுத்தும் வகையில் கடந்த ஆட்சியின் இறுதியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் தலைவர் பதவியில் அமர்த்தினார்கள்.


கடந்த 26.11.2021 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூபாய் 1,10,00,000/- மதிப்பிலான 

16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த மேற்படி லாரியை Renault Triber TN 69 BL 5555  என்ற காரில் வந்து வழிமறித்து லாரி ஓட்டுநரான ஹரி (40) த/பெ. வைகுண்டம், ஆலங்குளம், திருநெல்வேலி மாவட்டம் என்பவரை தாக்கி, அவரையும் லாரியையும் கடத்தி சென்ற வழக்கில்

புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் 1) ஞானராஜ் ஜெபசிங் (39) த/பெ. செல்லப்பாண்டியன், அன்னை தெரசா நகர், தூத்துக்குடி,  2) விஷ்ணுபெருமாள் (26) த/பெ. சக்திவேல், பிரையண்ட்நகர், தூத்துக்குடி,  3) பாண்டி (21), த/பெ. முனியசாமி, நேசமணி நகர், முள்ளக்காடு, 4) மாரிமுத்து (30), த/பெ. கணபதி, எம்.ஜி.ஆர் நகர் பாலம், 

தூத்துக்குடி, 5) செந்தில்முருகன் (35), த/பெ. வேலு, முத்துவிநாயகர் கோவில் தெரு, முறப்பநாடு, 6) ராஜ்குமார் (26), த/பெ. துரைகிருஷ்ணன், மிலிட்டரி லைன் தெரு, பாளையங்கோட்டை, 7) மனோகரன் (36) த/பெ. சேகர், பிள்ளையார் கோவில்தெரு, மட்டக்கடை, தூத்துக்குடி  ஆகிய 7 பேரையும் கைது செய்து 

ரூபாய். 1,10,00,000/- மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றி கொண்டு வந்த ரூபாய் 10,00,000/- மதிப்பிலான கடத்தப்பட்ட லாரியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.*

மேற்படி இவ்வழக்கின் எதிரியான ஞானராஜ் ஜெபசிங் என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ்  ஞானராஜ் ஜெபசிங் த/பெ.  செல்லப்பாண்டியன் அன்னை தெரசா நகர் தூத்துக்குடி என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மேற்படி எதிரி ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

இந்த ஆண்டு இதுவரை சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 183 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post