போலி ஹால்மார்க் முத்திரை.! - ரூ. 11 லட்சம் மதிப்பு தங்க நகைகள் பறிமுதல் - கோவை நகைக்கடைக்கு சீல்?

 

File Photo for Image

போலியான ஹால்மார்க் முத்திரை பதித்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய தர நிர்ணய  அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர் நடவடிக்கையாக கடைக்கு சீல் வைக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

கோயம்புத்தூர் ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி பகுதிகளில் போலியான ஹால்மார்க் முத்திரை பதித்த தங்கத்தை விற்பனை செய்வதாக இந்திய தர நிர்ணய அமைவனம் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்திய தர நிர்ணய அதிகாரி மீனாட்சி தலைமையில் 10 பேர் இரண்டு குழுவாக பிரிந்து ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். அப்போது, போலியான முத்திரை பதித்த ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்கங்களை பறிமுதல் செய்தனர்.


இதனையடுத்து போலியான முத்திரையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் , மேல் நடவடிக்கை தொடரும் என தெரிவித்தனர்


Ahamed

Senior Journalist

Previous Post Next Post