அமெரிக்காவில் ஒரே நாளில் 13.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு


அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 13.5 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உச்சம் தொட்டிருக்கிறது. 

நேற்று ஒரே நாளில் 13.5 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


மேலும் சில மாகாணங்களில் இன்னும் கொரோனா பாதிப்பு குறித்து அறிக்கை முழுமையாக வரவில்லை என்றும் அந்த அறிக்கைகள் வந்தால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 3-ந் தேதி ஒரே நாளில் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அமெரிக்காவில் தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருவது கவலை அடைய செய்துள்ளது.

Previous Post Next Post