'நாங்க லவ் பண்ணது தான் தப்பு'... கடிதம் எழுதி வைத்து விட்டு பரிதாபமாக தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!

 புதுக்கோட்டை மாவட்டம் கரமகுடி பகுதியை சேர்ந்த திருப்பதி - சந்தியா தம்பதியருக்கு 3 பெண்கள் மற்றும் சரண் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் திருப்பூர் வீரபாண்டி, பழக்காரர் தோட்டம் பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கு உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

 சரண் (வயது 18) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் டி ஃபார்ம் (மெடிக்கல்) முதலாம் ஆண்டு படித்து வந்தார். சரண் தனது தூரத்து சொந்தமான புதுக்கோட்டை கந்தர்வ கோட்டையை சேர்ந்த வினிதா(18) என்ற பெண்ணை காதலித்து வந்தார். வினிதாவும் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

 இந்த நிலையில் கடந்த மாதம் வினிதாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சரண் அவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் யாருக்கும் தெரியாமல் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

 இதனிடையே சரண் இன்ஸ்டாகிராமில் தனக்கு திருமணம் நடைபெற்று விட்டதாக பதிவிட்டுள்ளார். இதனை கண்ட சரணின் சகோதரி இருவரையும் வீட்டுக்கு அழைத்துள்ளார். இருவரும் சரணின் வீட்டிற்கு சென்ற போது வினிதாவின் தந்தை வீரமுத்து, தனது மகளை காணவில்லை என கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 அந்த வழக்கு தொடர்பாக சரணின் வீட்டாருக்கு விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சரணின் தந்தை படிக்கும் வயதில் எதற்கு திருமணம்? படித்து முடியுங்கள் நானே திருமணம் செய்து வைக்கிறேன். என சொல்லி புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். 

தன்னால் தனது குடும்பத்தினருக்கு பிரச்சினை வருவதாக எண்ணிய சரண், வினிதா இருவரும் தங்களை பிரித்து விடுவார்களோ என்று நினைத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

வேலைக்கு சென்று திரும்பிய சரணின் அம்மா இருவரும் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சியில் கூக்குரலெடுத்து அழுது உள்ளார். அவரது அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் காதல் தம்ப்தியினரின் உடல்களை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்களை கைப்பற்றிய போது வீட்டை சோதனை செய்ததில் சரண் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. 

அதில் "நாங்க லவ் பன்னது தான் தப்பு. எங்களால தான் இவ்வளவு பிரச்சினை, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. வினிதாவின் உடலையாவது அவங்க வீட்டுல கொடுத்துடுங்க"என எழுதி வைத்து உள்ளனர். இதனையடுத்து போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post