மாற்றுதிறனாளிகளிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூபாய். 2,25,000/- பணம் மோசடி செய்தவர் கைது.!


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விநாயகி (35), க/பெ. கிருஷ்ணன், மறுகால்துறை, நாசரேத் என்பர் மாற்றுதிறனாளி ஆவார். இவரிடம் அழகுதுரை (31), த/பெ. ஜெயபால், அழகு அம்மன் கோயில் தெரு. சாத்தான்குளம் என்பவர் அறிமுகமாகி, தனக்கு பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய விநாயகி தனக்கும், தனது மாற்றுதிறனாளி நண்பரான லெட்சுமணன் (27), த/பெ. சின்னபெருமாள், 

செம்பூர், ஆழ்வார்திருநகரி என்பவருக்கும் சேர்த்து வேலை வாங்கி தரக்கூறி ரூபாய் 2,25,000/- பணம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அழகுதுரை வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதையறிந்த விநாயகி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,  சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜூ  மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்  தலைமையில் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரியை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு  மோசடியில் ஈடுபட்ட அழகுதுரையை  கைது செய்தனர்.

Previous Post Next Post