26 பேர் பலி... 23,459 பேருக்கு கொரோனா...

 தமிழ்நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கையானது கடந்த சில நாட்களாக மிக அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று மட்டும் 23 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 47 பேருக்கு பரிசோதனை செய்ததில் இந்த பரவல் எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இன்று ஒரே நாளில் இருபத்தி ஆறு பேர் குறவனுக்கு பலியாகி உள்ளார்கள். 

சென்னையில் அதிகபட்சமாக 8 ஆயிரத்து 963 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 2504 பேருக்கும், கோவையில் 1564 பேருக்கும், திருவள்ளூரில் 1393 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 802 பேருக்கும் கொரோனா வந்துவிட்டது.


பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பல்வேறு ஊர்களுக்கு கூட்டங்களுக்கு இடையே சென்று வருவதால் இன்னும் ஓரிரு நாட்களுக்கு நோய் பரவல் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என தெரியவருகிறது.

Previous Post Next Post