35 பேர் பலி... 26,981 பேருக்கு புதிய தொற்று.. 'கிர்'ரென்று உயர்ந்த கொரோனா!

 கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக நிலையாக இருந்தது. தினசரி புதிய தொற்று எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டாமல் இருந்தது.இந்த நிலையில் இன்று புதிதாக 26 ஆயிரத்து 949 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் எண்ணிக்கையும் சேர்த்து 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 50 ஆயிரத்து 635 பேருக்கு சோதனை செய்ததில் இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு 35 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 37073 ஆக உள்ளது.

சென்னையில் புதிதாக 8007 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால் கோவையில் இன்று ஒரே நாளில் 3002 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 2194 பேருக்கும், கன்னியாகுமரியில் 1008 பேருக்கும் அதிகபட்ச புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

Previous Post Next Post