கொலை மிரட்டல் மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேருக்கு குண்டாஸ்.!*


கடந்த 01.01.2022 அன்று தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகாராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தாளமுத்துநகர் ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர்களான 

1) ஆனந்த் (எ) அசோக் (27), த/பெ. மாரிக்குமார் மற்றும் அவரது சகோதரர் 2) கண்ணன் (எ) ரமேஷ் கண்ணன் (24), த/பெ. மாரிக்குமார் ஆகிய 2 பேரை தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

அதேபோன்று தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் கடந்த 01.11.2021 அன்று அந்தோணி சந்திராயப்பன் (42), த/பெ.  அமலதாசன், அம்புரோஸ் நகர், தருவைகுளம் என்பவருக்கு சொந்தமான படகில் உள்ள 

ஜிபிஎஸ் கருவியை திருடிய வழக்கில் பூரண சுரேஷ் (எ) சுரேஷ் (33), த/பெ. ஜேசுராஜா, 50 வீடு காலனி, வெள்ளப்பட்டி என்பவரை தருவைகுளம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேற்படி இவ்விரு வழக்குகளின்  எதிரிகளான ஆனந்த் (எ) அசோக், கண்ணன் (எ) ரமேஷ் கண்ணன் மற்றும் பூரண சுரேஷ் (எ) சுரேஷ்  ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆனந்த தாண்டவம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். ஜெயக்குமாரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில்  தாளமுத்துநகர், ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர்களான 1) ஆனந்த் (எ) அசோக், த/பெ. மாரிக்குமார், 2) கண்ணன் (எ) ரமேஷ் கண்ணன், த/பெ. மாரிக்குமார் மற்றும் 3) பூரண சுரேஷ் (எ) சுரேஷ் (33), த/பெ. ஜேசுராஜா, 50 வீடு காலனி வெள்ளப்பட்டி ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

அவரது உத்தரவின் பேரில் தருவைகுளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆனந்த தாண்டவம் மேற்படி எதிரிகள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.

Previous Post Next Post