பாப்பாங்குளத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை... சோளக்காட்டில் 4 பேரை கடித்துக் குதறியது!

 திருப்பூர் அவிநாசி அருகே சிறுத்தை தாக்கியதில் 4 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அந்த பகுதியில் 500 ககும் மேற்பட்ட பொதுமக்கள் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் குவிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம்,அவிநாசி அருகே  சேவூர் அடுத்த பாப்பாங்குளத்தில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த  வரதராஜன்-62   மொட்டையன் (எ) மாறன் -68 ஆகிய இரண்டு பேரும் சோளத்தட்டு அறுவடைக்கு சென்று உள்ளனர். 

அதிகாலை பனிமூட்டம் இருந்த நிலையில் அங்கு சோளக்காட்டில் இருந்த மர்ம விலஙகு தாக்கியது. இதில் முகம், தோள்பட்டை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயமடைந்த இருவரையும்   முதலுதவி சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

பின் மேல் சிகிச்சைக்காக இருவரும்  திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த அவிநாசி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத் துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மனிதர்களை தாக்கியது சிறுத்தையா, புலியா அல்லது வேறு ஏதாவது மர்ம விலங்கு எது என ஆராய்ந்து வருகின்றனர். 

சம்பவ இடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைகளில் கம்பு, தடி, அரிவாள் என  சோளக் காட்டை சூழ்ந்து உள்ளனர். 

இந்த நிலையில் மர்ம விலங்கினை தேடி சோள காட்டுக்குள் சென்ற மேலும் இருவர் அந்த விலங்கால் தாக்கப்பட்டனர்.  அவர்கள் தங்களை தாக்கியது சிறுத்தை என தெரிவித்து உள்ளனர.

இதையடுத்து சோளக்காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை தேடி வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு இருக்கும் பொதுமக்கள் சிறுத்தையால் காயம்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களை அப்புறப்படுத்திவிட்டு தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளார்கள்.

சிறுத்தை புகுந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Previous Post Next Post