தூத்துக்குடியில் ரூ.57.10 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் - காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!*


தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாளைரோடு பகுதியில் ரூ.9.76 கோடியில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்கா,அறிவியல் பூங்கா,மானுடவியல் பூங்கா மற்றும் கோளரங்கம், 

தருவைகுளம் பகுதியில் ரூ. 35.84 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மீளவிட்டான் பகுதியில் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 136 ஏக்கர் பரப்பளவில் சீ.வ.குளம் மேம்படுத்தும் பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது  


ரூ.57.10 கோடி மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் இன்று திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,  சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா  (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திக்குளம்)  ஆகியோர் பங்கேற்றனர்.

Previous Post Next Post