மாநில அளவிலான கூடை பந்து போட்டியில் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி முதலிடம்.!


ஆர்ஜின் கூடை பந்து கழகம் மற்றும் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் இனைந்து நடத்திய  மாநில அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான  கூடைப்பந்து போட்டி தூத்துக்குடியில் நடந்தது.


மாநில அளவிலான இந்த போட்டியில்  சென்னை வேலம்மாள், சேலம் செயின்ட் மேரிஸ், நாகர்கோவில் கார்மள்,தூத்துக்குடி காரப்பேட்டை, லசால், செயின்ட் தாமஸ்,  விகாசா , கிரசன்ட் பள்ளிகளும்   மற்றும் திண்டுக்கல் CSMA பள்ளி - MSP பள்ளி, நெல்லை MDT பள்ளி தஞ்சாவூர் கமலா சுப்பிரமணியன் பள்ளி,பட்டிவீரமபட்டி NSVV  போன்ற  பள்ளிகளும் கலந்து கொண்டன.மாநில அளவிலான இந்த போட்டியை நடத்துகின்ற ஆர்ஜின் கூடை பந்து கழகம் மற்றும் காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த நிர்வாகிகள் அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகளை முறையாக  பின்பற்றி ஜனவரி 08 மற்றும் 10,11,12 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள  கூடைப்பந்து மைதானத்தில் நடத்தப்பட்டது. 


இந்நிகழ்ச்சியின் தொடக்க விழா பள்ளியின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும்,  பள்ளியின் செயலாளர் செல்வராஜ், நாடார் மகமை துணைச்செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. 


தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கரமராஜா கலந்து கொண்டு புதியவற்றை திறந்து விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். 


விழாவில் மகமையை சேர்ந்த நிர்வாகிகள் பெத்துபாண்டியன், முருகேசன், தினகரன், காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க செயலாளர் சங்கரேஸ்வரன், முன்னாள் செயலாளர் பெத்துராஜ், மற்றும் ராஜேந்திரபிரபு, பட்டுராஜா, வேல்சாமி, மாணிக்கவேல், உத்திரபாண்டி, லிங்கராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். 


சிறப்புடன் தொடங்கப்பட்ட மாநில அளவிலான கூடை பந்து போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.போட்டியில் தூத்துக்குடி சென்ட் தாமஸ் ஆங்கிலப் பள்ளி மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது.


சென்னை வேலம்மாள் பள்ளி இரண்டாவது இடத்தையும் , தூத்துக்குடி கிரசன்ட் பள்ளி மூன்றாவது இடத்தை யும்,  திண்டுக்கல் MSP பள்ளி நான்காவது இடத்தை யும் பெற்றுள்ளது.  வெற்றி பெற்ற அணிகளுக்கு காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கணேசன் ,  தாளமுத்துநகர் காவல்நிலைய ஆய்வாளர் ஜெயந்தி , தொழிலதிபர் மலர்விழி ஆதித்தன் மற்றும்   ஆர்ஜின் கூடை பந்து கழக துணை தலைவர் செல்வக்குமார் ,   ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்த் , சூர்யகாந்த் , எ பி ஆகியோர் நினைவு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கொளரவித்தனர்.


மேலும், கோலி கிராஸ் சார்பாக 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்காக  நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் ஆங்கிலப் பள்ளி இரண்டாவது இடத்தையும்,  இதனை தொடர்ந்து TBA கிளப் நடத்திய மாவட்ட அளவிலான போட்டியில் இதே மாணவர்கள் முதல் இடத்தையும்  பிடித்து சாதனை படைத்தது அனைவரையும் மகிழ்சியில்  ஆழ்த்தியுள்ளது. 


இந்த தொடர் வெற்றிக்காக உழைத்த பயிற்சியாளர் பொன் மாரியப்பனுக்கு பள்ளி முதல்வர் ஆஸ்கர் மற்றும் தாளாளர் பாதர் ராயப்பன் , தொமோசியன் கூடை பந்து அகடமி தலைவர் வேல்ராஜ் , அமைப்பாளர் துரை உள்பட்ட  அனைத்து ஆசிரியர்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

மேலும் செயின்ட் தாமஸ் பள்ளி தொடர்ந்து பெற்று வரும் இந்த அதிரடியான வெற்றியை , போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி பயிற்சியாளர்களும் , மாணவர்களும்  , கூடைப்பந்து ரசிகர்களும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்து கூறி  கொண்டனர்.

Previous Post Next Post