சத்தியமங்கலம் ஸ்ரீலஷ்மி நாராயணர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா - பக்தர்கள் சுவாமி தரிசனம்.


சத்தியமங்கலம் வடக்குப் பேட்டை திரு.வி.க.  நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி மிக விமர்சியாக நடைபெற்றது, ஸ்ரீலட்சுமி நாராயணர் சொர்க்கவாசலில் , அதிகாலை 5.30 மணியளவில், வேத விற்பன்னர்கள் வேத, மந்திரம் ஓத, மேள தாளம் முழங்க, 

ஸ்ரீ  நாராயணர் வெண் பட்டாடை உடுத்தியும்,, ஸ்ரீ லட்சுமி தேவி நீலக் கலர் பட்டுடுத்தி யும், சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி , ராமானுஜர் அவர் களுக்கு தரிசனம் அளித்தும், ராமானுஜர் இவர்களுக்கும்  காட்சி அளித்தார். சொர்க்கவாசல் திறப்பின் போது,


 பக்தர்கள் நாராயணா, கோவிந்தா என கரகோஷம் எழுப்பினர். வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக தமிழக அரசு வழிகாட்டுதலின் படி முககவசம் அணிந்ததை உறுதிபடுத்தியும், வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே பக்தர்களை கோயில் நிர்வாகிகள் அனுமதித்தனர். 

கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் இன்றி காணப்பட்டது. பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கியும், பின்னர் அன்னதானமும் செய்தனர்.. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post Next Post