ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.!


இலங்கை கடற்படையால்  சிறைப்பிடிக்கப்பட்டு  இலங்கை வசமுள்ள 108 விசைப்படகு மற்றும் 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு  நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 108 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கடலில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அவைகள் அனைத்தும் தற்போது பயன்படுத்த முடியாத  நிலையில் உள்ளது.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரை நேற்று சந்தித்து இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு  இலங்கை வசமுள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஆழ்கடல் மீன் பிடி படகுகளுக்கு வழங்கப்பட்ட  வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும், டீசல் மானியத்தை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர்,  மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இலங்கை வசம்  உள்ள 108 விசைபடகுகளுக்கு தலா 5 லட்சம் ரூபாயும்  17 நாட்டு படகுகளுக்கு தலா 1.5 லட்சம்  ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராமேஸ்வரம் பகுதியில் மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் தீடீர்  ஆலோசனை கூட்டம் நடத்தி நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றினர்.

Previous Post Next Post