வெற்று இலை..இல்லீங்க ,சும்மா டிரை பண்ணிப் பாருங்க...!

துண்டுகளாக்கிய வெற்றிலை, பெருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை, நசுக்கிய ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்து வெற்றிலைச்சாறு இறங்கியதும் வடிகட்டி குடித்தால் ஒற்றைத் தலைவலி, அஜீரணம் போன்ற உபாதைகள் நீங்கும்; பசியைத் துாண்டும்.

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை.

வெற்றிலையில் உள்ள சத்துக்கள்

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால்(Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post