கேரள கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு! - பிஷப் பிரான்கோ முல்லக்கல் விடுவிப்பு.!


கேரளத்தில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பிஷப் பிரான்கோ முல்லக்கல் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் கத்தோலிக்க பிஷப்பான பிரான்கோ முல்லக்கலின் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு கொச்சினில் கன்னியாஸ்திரி

ஒருவர், தன்னை பிஷப் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தது கேரளாவில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த வழக்கு விசாரணை கோட்டயம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வலுவான சாட்சியங்கள் இல்லாததால் பிரான்கோ முல்லக்கலை வழக்கிலிருந்து விடுபிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2014 மற்றும் 2016 க்கு இடையில் முல்லக்கல் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி கோட்டயம் எஸ்பியிடம் 2018 ஜூன் மாதம் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட பிஷப் செப்டம்பர் 21 அன்று கைது செய்யப்பட்டார். ஐந்து கன்னியாஸ்திரிகள் பகிரங்கமாக அவரைக் கைது செய்யக் கோரி எர்ணாகுலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது.

பிராங்கோ மூலக்கல் மீது பலாத்காரம் உள்ளிட்ட 7 ஐபிசி பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு 39 சாட்சிகளை விசாரித்தது.

Previous Post Next Post