முழு ஊரடங்கு: எப்படி இருக்குது திருப்பூர்?!

 திருப்பூரில் முழு ஊரடங்கு காரணமாக மாநகரில் உள்ள அனைத்து சாலைகளும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடியது.


தமிழக அரசின் முழு ஊரடங்கு காரணமாக , திருப்பூர் மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் வாகனப்போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. 

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், குமரன் சாலை, புதுமார்க்கெட் வீதி, புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பணிகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளின் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர்.



  குறிப்பாக திருப்பூர் பழைய பஸ் நிலையம், மாநகராட்சி சந்திப்பு, புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். 




அதே வேளையில், பால் விநியோகம், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள்,பத்திரிகை விநியோகம் ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம், குமரன் மகளிர் கல்லூரி, அம்மாபாளையம்,காசிபாளையம், கோவில்வழி ஆகிய பகுதிகளிலும்  போலீசார் தீவிர வாகனச்சோதனைல்  ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரம் வெறிச்சோடி போய் இருக்கிறது. 


Previous Post Next Post