பாலியல் வழக்கு - பிரிட்டன் இளவரசர் ஆன்ட்ரூவின் பதவி மற்றும் பட்டங்கள் பறிப்பு!

அமெரிக்காவில் பாலியல் வழக்கு பதியப்பட்ட நிலையில் பிரிட்டன் இளவரசர் ஆன்ட்ரூவின்  இராணுவ பட்டங்கள் உட்பட தொண்டு நிறுவனங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது,

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தின் மகனான இளவரசர் பிரின்ஸ் ஆன்ட்ரு மீது அமெரிக்கப் பெண் தொடர்ந்த பாலியல் பலாத்கார வழக்கை அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆண்ட்ரூ இனி "ஹிஸ் ராயல் ஹைனஸ்" என்ற பெயரை எந்த இடத்திலும் உத்தியோகபூர்வமாக பயன்படுத்த மாட்டார் என்று அரச வட்டாரம் வியாழக்கிழமை CNN இடம் தெரிவித்தது.

ராணியின் ஒப்புதல் மற்றும் உடன்படிக்கையுடன், டியூக் ஆஃப் யார்க்கின் இராணுவ பட்டங்கள் மற்றும் அரச பதவிகள் ராணியிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது, டியூக் ஆஃப் யார்க் இனி பொதுக் கடமைகளை மேற்கொள்ள மாட்டார், மேலும் அவர் இந்த பாலியல் வழக்கை ஒரு தனிப்பட்ட குடிமகனாக  அனுகுவார்" என்று அரண்மனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. 

மேலும் அந்த அறிக்கையில்...

அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு அவரின் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும், இது உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளதுடன், அவர் தி டியூக் ஆஃப் யார்க் என்ற பட்டத்திற்கு திரும்ப மாட்டார்" என்றும் தெரிவித்தது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசர்களில் ஒருவருமான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது, கடந்த காலங்களில் பாலியல் பலாத்கார புகார் எழுந்துள்ளது.

அதாவது தற்போது 61 வயது ஆகும் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீது, அமெரிக்க நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதுவும், இங்கிலாந்து இளவரசர் மீது அமெரிக்கப் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தி, இது தொடர்பாக வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றிருந்ததாகவும், அப்போது அவருக்கு ஜெப்ரி எப்ஸ்டின் என்பவர் தனது காதலியான விர்ஜீனியா ஜிப்ரே என்ற இளம் பெண்ணை அறிமுகப்படுத்தியதாகவும், அந்த சமயத்தில் தான் விர்ஜீனியாவுக்கு, இளவரசர் பிரின்ஸ் ஆண்ட்ரூ செக்ஸ் தொல்லை கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், அந்த நேரத்தில் விர்ஜீனியாவுக்கு 17 வயது தான் ஆகியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி, மைனர் சிறுமியான விர்ஜீனியாவை மிரட்டி பலவந்தமாக இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ பாலியல் உறவு கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி அப்போது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது விர்ஜினீயாவுக்கு 37 வயது ஆகிறது. இதனால், “தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவதாகத் தெரிவித்துள்ள அந்த பெண், இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நீதிமன்றத்தில் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீது வழக்கு தொடர்ந்தார் .

இது குறித்த விசாரணை கடந்த நவம்பர் 3ம் தேதி (2021)காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த விசாரணையில், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி லீவிஸ் ஏ.கப்லன் கூறினார்.

குறிப்பாக, இந்த வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டு, அதன் பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்று அப்போது நீதிபதி அறிவித்தார்.மேலும், இந்த வழக்கில் விசாரணை தொடங்கும் நாளானது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இது ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் விர்ஜீனியாவின் காதலர் ஜெப்ரி எப்ஸ்டீன், தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காதலர் ஜெப்ரியின் தற்கொலைக்கு இளவரசர் மீதான செக்ஸ் புகாரில் தன்னிடமும் விசாரணை நடத்தக்கூடும் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், தற்கொலை செய்துகொண்ட ஜெப்ரி எப்ஸ்டீனின் முன்னாள் காதலியும் இந்த வழக்கில் தற்போது சாட்சியாகச் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தின் மகன் மீது செக்ஸ் புகார் எழுந்துள்ள சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இளவரசர் மீது வழக்கை தொடரலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்புக்கு மறுநாள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Ahamed

Senior Journalist

Previous Post Next Post